Connect with us
 

News

மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 40-வது படமான ‘ஜகமே தந்திரம்’ இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிக்க உள்ள மற்ற்றுமொரு திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்ய ஜோதி ஃ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளா இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் தனுஷின் 44-வது படத்தை அவரே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது தற்போது தனுஷ் இப்படத்தில் கதை,திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுத இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி ,உத்தம புத்திரன் மற்றும் குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.