Connect with us
 

News

நடு இரவில் தனது பேய் படத்தை பற்றி அறிவிப்பு கொடுக்கும் இயக்குநர் மிஷ்கின் !

Published

on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

கடந்தாண்டு இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்துவேறுபாடு முற்றி பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் இவர் இயக்குவதாக இருந்த துப்பறிவாளன் 2 படத்தை விஷால் அவர்களே இயக்குவதாக அறிவித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தான் இயக்கவிருக்கும் அடுத்த படம் பற்றி அறிவிப்பை இன்று இரவு 12 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார் அதோடு இது ‘பிசாசு2’ என்றும் கூறுகின்றனர் கோலிவுட் வட்டாரம்.

Continue Reading