Connect with us
 

News

தளபதி ரசிகர்களுக்கு புது வருட விருந்தாக வரும் மாஸ்டர் டிரைலர் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கள் திருநாளில் விருந்தாக ரசிகர்களுக்கு வரவுள்ளது. ஆனாலும் அதிகார்வபூர்வ வெளியீட்டு தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தயாராக இருப்பதாகவும் இந்த டிரைலர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டிரைலரில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பபெரிய டுவிஸ்ட்யாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனை செய்தது. அதை விட டிரைலர் சாதனை செய்ய வய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.