Connect with us
 

News

மாஸ்டர் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல் !

Published

on

Master,

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் செய்வதிலும் சரி ரசிகர்களின் விருப்பத்தை அறிந்து படங்கள் கொடுப்பதிலும் கிங் என்று வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை பொங்களுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

அதே போல சிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படமும் வரும் பொங்களுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 1000 அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு வெறும் 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் சிம்புவின் ஈஸ்வரன் வெளியாக சற்று தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது. ஜனவரி மாதம் சிம்புவின் பிறந்த நாள் வருகிறது அதனால் அந்த நாளில் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை 800 திரையரங்கிலும் ஈஸ்வரன் படத்தை 200 திரையரங்கிலும் வெளியிட பேச்சுவார்தை நடத்தியுள்ளனர்.அதற்கு திரையாங்கு உரிமையாளர் ஈஸ்வரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தால் ஒரு வாரத்தில் அதிக திரையரங்கில் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதால் படக்குழு
அதிர்ச்சியடைந்ததாகவும் மேலும் பேச்சு வார்த்தை தொடரும் என்று தெரிகிறது.