Connect with us
 

News

8 முறையாக இணையும் யுவன் – செல்வராகவன் கூட்டணி !

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் தனுஷ் நடிப்பில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. அதுவும் குறிப்பாக அப்படங்களின் இடம்பெற்ற பாடல்கள் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரைட் இன்று வரையில்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கயுள்ளார். இந்த படம் செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணையும் 8-வது திரைப்படமாகும்.

இந்த செய்தியை கேட்ட சினிமா வட்டாரமும் சரி ரசிகர்கள் வட்டாரமும் சரி பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தனுஷ் – செல்வராகவன் மீண்டும் இணையும் இப்படம் கண்டிப்பாக புதுப்பேட்டை-2வாகதான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.