News
சிம்புவுக்கு மிகவும் அழுத்தமான கமர்ஷியல் படமாக மாநாடு அமையும் !

ஈஸ்வரன் திரைப்படத்துக்கு பின்னர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயாராகி வருகிறது.
நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளிவந்தன. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான டெனட்டை போலவே காட்சிகள் பின்னோக்கு செல்லும் வகையில் உள்ளது படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி அவரிடம் கேட்ட போது இன்றைய கால சூழ் நிலையில் மாநாடு திரைப்படம் மிகவும் மக்களுக்கு தேவையான படம். சிம்புவுக்கு மிகழும் அழுத்தமான கமர்ஷியல் படமாக மாநாடு அமையும்.
இந்த படத்தை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த படத்தில் சிம்பு ஒரு இஸ்லாமிய இளையனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.