News
மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தை கூறிய சிலம்பரசன் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் குறித்து சிம்பு கூறியதாவது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் சிவனை ரொம்ப பிடிக்கும் என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும்.
ஆனால் மதத்தின் மீதி பெரிய நம்பிக்கை இல்லை இந்தக் கடவுள் அந்தக் கடவுள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். இந்த சமூதாயத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது அதை மாற்றுவதற்கு எதாவது ஒன்று செய்ய வேண்டும் எனை நினைத்துக்கொண்டே இருந்தேன்.
இந்த படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை மிக சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் எந்த மொழியிலும் நல்ல ஒரு திரைப்படம் வெளியானால் இந்தியாவில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அப்படி ஒரு படமாக இந்த ‘மாநாடு’ இருக்கும் இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.