Connect with us
 

News

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வரும் ஷாலினி அஜித்?

Published

on

நடிகர் அஜித் உடனான திருமணத்திற்குப் பிறகு 2001ல் நடிப்பிலிருந்து விலகினார் ஷாலினி அஜித் அவரது கடைசி படம் பிரசாந்த் நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படமாகும்.

நடிகை ஷாலினி மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர். இப்படத்தை தமிழில் தளபதி விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்த போது ஷாலினியே கதா நாயகியாக நடித்தார்.இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் தமிழ் படம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதை தொடர்ந்து இவருக்கு தமிழில் பல திரைப்படங்கள் குவிந்தன.

அதன் பின்னர் தல அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அதன் பின் இயக்குநர் மணினத்னம் இயக்கத்தில் அலை பாயுதே படத்தில் நடித்தார் அந்த படம் ஷாலினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர்தான் அஜித் குமாரும் ஷாலினியும் காதல் செய்து 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் அதன் பின்னர் வெளியான திரைப்படம்தான் பிரியாத வரம் வேண்டும் 2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர் சினிமா நடிப்பில் இருந்து விலகினார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு மீண்டும் அடியெடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் நடிகை ஷாலினி இரண்டாவது கட்ட படப்பிடிப்புன் போது ஹைதராபாத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ரஹ்மான், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஏற்கனவே படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், நடிகை ஷாலினியும் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு நடன இயக்குனராக பிருந்தா பணியாற்றி வருகிறார். ஷாம் கவுசல் ஆக்சன் காட்சிகளை இயக்கி வருகிறார். இந்த படத்தை மணி ரத்னம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டிங் வேலைகளுக்கு ஸ்ரீகர் பிரசாத் , தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்து வருகிறார். ஜெயமோகன் வசனங்களை எழுதியுள்ளார். சிவா அனந்த் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading