Connect with us
 

News

தனுஷை பார்த்து வியக்கும் ஹாலிவுட் எழுத்தாளர் !

Published

on

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் படத்தில் நடிக்கிறார். இதற்காக கடந்த வாரம் அமெரிக்கா பறந்தார்.

தி கிரே மேன் நாவலை தழுவி உருவாகும் இப்படம் பற்றி இதன் எழுத்தாளர் ஒரு பேட்டியில் தனுஷை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோது எனக்கு அவரைப் பற்றி தெரியாது.

எனக்கு டுவிட்டரில் 6000 பாலோவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு 97 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். அவரின் வீடியோக்கள் சிலவற்றைப் பார்த்தேன்.

அவரை இந்த படத்தில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.