Connect with us
 

News

வழி மாறிய சென்ற அஜித் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் !

Published

on

பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, ட்ரோன் தயாரித்தல் ஆகியவற்றில் ஆர்வமிக்க நடிகர் தல அஜித். சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

வேப்பேரில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று திடீரென வந்தார் அஜித்.

போலீஸ் அவரிடம் விசாரித்ததில் எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இன்று மாறி வந்தது தெரியவந்தது.

வாடகை காரில் அஜித் வந்ததால் கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த போலீசார் உட்பட பலரும் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.