Connect with us
 

News

மீண்டும் ரஷ்யாவிம் விக்ரம் நடிக்கும் கோப்ரா படப்பிடிப்பு !

Published

on

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

கடந்த ஆண்டு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கொரோனா தொற்று உலகையே ஆட்டி படைத்தது இதன் காரணமாக ரஷ்யாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தியது பின்னர் இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த முக்கியமான ஒரு சில காட்சிகளை படமாக்கினர் படக்குழு.

ஆனாலும் ரஷ்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சி மட்டுமே மீதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடித்த நேற்று கோப்ரா படக்குழுவினருடன் விக்ரம் புறப்பட்டு சென்றார்.

நாளை ஆரம்பிக்கும் படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் இந்தியா திரும்புகிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.