Connect with us
 

News

விஷாலை தொடர்ந்து சூர்யா-வுக்கு வில்லனாக மாறிய வினய் !

Published

on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் சூர்யா 40. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வன்னன், சூரி நடிக்கவுள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளார் டி.இமான் இசையமைக்கயுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடிக்கவுள்ளாராம். உன்னாலே உன்னாலே படம் மூலம் நாயகான அறிமுகமான வினய் தமிழில் நாயகனாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கிய துப்பவறிவாளன் திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக நம்மை மிரள வைத்தவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.