Connect with us
 

News

அமெரிக்காவில் குடும்பத்துடன் கர்ணன் திரைப்படம் பார்த்த தனுஷ் !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளி கிழமை வெளியானது. வெளியான ஒரே நாளில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்தது தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் கர்ணன் என்ற பெருமை பெற்றது.

இந்நிலையில் இப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் தனது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கிவுள்ளார். இதனையடுத்து தனுஷ் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கர்ணன் படத்தின் சிறப்பு காட்சியை குடும்பத்துடன் பார்த்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்துவிட்ட தனுஷ் இந்த அளவுக்கு பிரமாதமாக திரைப்படம் வரும் என்று நான் கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை என்றும் மாரி செல்வராஜ் உள்பட படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.