Connect with us
 

News

ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த்

Published

on

தொடர்ந்து சரியான வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு கஜினிகாந்த் என்று தலைப்பு வைக்கப்படுள்ளது.

இதில் இவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா நடிக்கிறார் என்பது படத்திற்கு சற்று கூடுதல் பலம் என்றே கூறலாம்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும்  மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading