Connect with us
 

News

அடங்காதே இயக்குனரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்து வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் திறமையான நடிப்பை பல படங்களில் நமக்கு காட்டியுள்ளார். அப்படி இவரின் நடிப்பால் பல படங்களில் பாராட்டையும் பெற்றார் அதில் காக்கா முட்டை, வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.

தற்போது மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் இவரின் நடிப்பில் தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர், ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக், மோகன் தாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதா நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக உருவாகயுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் அடங்காதே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார் இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.