News
கொரோனா தடுப்பு நிதியாக விக்ரம் ரூபாய் 30 லட்சம் வழங்கினார் !
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் தடுப்பு நடவடிக்கைகாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதி அளிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுதார்.
இதனை தொடர்ந்து திரை நட்சச்திரங்கள் பலர் நிதி அளித்து வருகின்றனர் சிவகுமார் குடும்பம், ஏ.ஆர்.முருகதாஸ், உதய நிதி, வெற்றி மாறன், ஷங்கர், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன், அஜித் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்தும் ஆன்லைன் மூலமாகவும் வழங்கி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை முதல்வரை நேரில் சேன்று சந்தித்து நிதியுதவியான ரூபாய் 50லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் வழங்கினார்.
தற்போது சீயான் விக்ரம் தனது நிதியுதவி தொகையான ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைதுள்ளார்.
மு.க.ஸ்டாலிந் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த வாரம் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் நேரில் சென்று வாழ்த்து கூறுனார் என்பது குறிப்பிடத்தக்கது.