Connect with us
 

News

ஒரு வழியாக வெளியீட்டுக்கு தயாரான நரகாசூரன் திரைப்படம் !

Published

on

துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படம்தான் நரகாசூரன். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, மற்றும் இந்திரஜித் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பணப்பிரச்சனை காரணமாக கெளதம் மேனனுக்கும் கார்த்திக் நரேன் இருவருக்கும் பிரச்சனை வந்து தயாரிப்பு பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்து ஒத்தி வைத்து வெளியாகாமல் இருந்து வந்தது. இறுதியாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது இருந்த போதும் எதுவுமே கைகூடவே இல்லை.

இந்நிலையில் நரகாசூரன் திரைப்படத்தை சோனி லைவ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் விரைவில் இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும். இதன் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும்.