Connect with us
 

News

விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் நடிகை காயத்ரி ரகுராம் புகார் !

Published

on

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த சரிசையில் நடிகர் விஷால் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் பள்ளி சார்பில் இருந்து அனைத்து பெற்றோர்களிடமும் மானவர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்றும் இதை ஒரு ஜாதி பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை மற்றும் நடன இயக்குனரருமான காயத்ரி ரகுராம் விஷால் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் காயத்ரி ரகுராம் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்கள் உங்களிடமிருந்து ஓடுகின்றன என்று பதிவு செய்து இருக்கிறார்.