Connect with us
 

News

திரையரங்கில் வெளியாகி சிறந்த அனுபவத்தை கொடுக்க வேண்டிய படம் – தனுஷ் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம் இந்த மாதம் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனை தனுஷ் விரும்பவில்லை.

திரையரங்க உரிமையாளர்கள். வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜெகமே தந்திரம் படத்தை திரைப்படத்தை வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறே என்று கூறியிருந்தார்.

தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி இப்படத்தை ஓ.டி.டி தளத்துக்கு விற்று விட்டார். இது தனுஷுக்கும் அவரின் ரசிகர்களும் மிகவும் ஏமாற்றதை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜகமே தந்திரம் படம் சம்பந்தமான எந்த ஒரு பதிவுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷ் வெளியிடவேவில்லை.

நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. தனுஷ் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தியேட்டரில் வெளியாகி சிறந்த அனுபவத்தை கொடுக்க வேண்டிய திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வருகிறது. ஆனாலும் அனைவரும் ஜெகமே தந்திரம் மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கூறியுள்ளார்.