Connect with us
 

News

அனைவரையும் கவர்ந்த 777 சார்லி திரைப்படத்தின் டீஸர் !

Published

on

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் 777 சார்லி. இதில் ராக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா ஶ்ரீங்கிரி, ராஜ் ஷெட்டி, டானிஷ் சைட், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் மற்றும் இயக்குனர் பிரித்விராஜ் வாங்கியுள்ளார்.

அதே போல தமிழ் உரிமத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். தெலுங்கு உரிமத்தை நடிகர் நானி வாங்கியுள்ளார். வெளியீட்டு முன்னரே படத்தின் வியாபாரம் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மூலம் பாபி சிம்ஹா கன்னட சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.