Connect with us
 

News

சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்த ஆர்யாவின் மகாமுனி !

Published

on

அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். இந்த நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி என்ற திரைப்படத்தை இயக்கிவிருந்தார். ஆர்யாவுடன் நடிகைகள் இந்துஜா, மகிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2019-ம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்யாவுக்கு மிக நீண்ட நாள்களுக்கு பின்னர் வெற்றி கொடுத்த திரைப்படம். நேற்று இப்படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் நான் இயக்கிய மகாமுனி திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்து அவர் கூறியிருந்தது:- மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் உறுதியாகிவிட்டன. அத்துடன் மேலும் இரண்டு விருது போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.