Connect with us
 

News

மூன்று மொழிகளில் ஷங்கர் இயக்கும் மூன்று புதிய படங்கள் !

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். தேர்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படிருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுருக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரிவா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிக்கும் ஒரு தெலுங்கு ப்டத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளார் தில்ராஜூ தயாரிக்கவுள்ளார்.

அந்த படம் முடிந்ததும் அந்நியன் படத்தை இந்தியில் உருவாக்கவுள்ளார். இதில் சியான் விக்ரம் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.