Connect with us
 

News

இணையத்தை கலக்கும் தெறி பேபிஸ் புகைப்படம் !

Published

on

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று சொல்லப்படும் நடிகர் தளபதி விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் தற்போது கனடாவில் சினிமா உருவாக்கம் சம்பந்தமான படிப்பை படித்து வருகிறார். மகள் ஷாஷா பள்ளிப்படிப்பில் இருக்கிறார். சஞ்சய் வேட்டைக்காரன் என்ற படத்திலும் சாஷா தெறி படத்திலும் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்தநாளான இந்த மாதத்தில் ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு விஜய் சம்பந்தப்பட்ட பெயரை டிரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது #ThalapathyBirthday என்ற பெயர் டிரெண்ட் ஆகி வருகிறது.

இன்று டுவிட்டரில் #Theri என்ற ஹேஷ்டேக் டிரெண்ங்கில் இருந்து வந்தது அதிகாலையில். அதில் தெறி படப்பிடிப்பின் போது சஞ்சய் மற்றும் சாஷா மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த மாதம் விஜய் பிறந்தநாள் அந்த நாளில் தளபதி 65 படத்தின் முக்கியமான அப்டேட் எதும் வெளிவருமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருன்கின்றனர்.