Connect with us
 

News

சூர்யா நடிக்கும் 40-வது படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா நடிக்கும் 40-வது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

டாக்டர் படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதா நாயகியாக அறிமுகமான இளம் நாயகி ப்ரியங்கா மோகன் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் எப்போது தொடங்குவது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை இரண்டாவது வாரத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.