Connect with us
 

News

தளபதி 66 படத்தில் விஜய்க்கு இத்தனை கோடி சம்பளமா ?

Published

on

விஜய் இப்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் 65-வது படம். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தனர் படக்குழு. கொரோனா ஊரடங்கு காரணத்தால் திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய ஒரு தகவல் கோடம்பக்க்ம் முழுவதும் பரவியிருக்கிறது. அந்த படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில் ராஜூ தயாரிக்கிறார் என்றும். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் பேசப்பட்டன.

இதற்கிடையில் விஜய்யின் 66-வது படத்தை பிரபல பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் இன்னோரு தகவல் பரவியிருக்கிறது.

விஜய் கால்ஷீட் யாருக்கு என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். இந்த படத்திலிருந்து விஜய் சம்மளம் ரூ.100 கோடியாக உயர்ந்திருப்பதாக பேசப்படுகிறது.