Connect with us
 

News

டி43 படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ் !

Published

on

ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற தனுஷ் அங்கு 4 மாதங்களாக தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பின்னர் சில நாட்கள் அங்கு ஓய்வெடுத்து விட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்த தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் டி40 படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடி ஐதராபாத்தில்யுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

தனுஷ் டி43 படத்தில் நடித்து முடித்தவுடன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது.