Connect with us
 

News

சாதனை மேல் சாதனை செய்து வரும் அஜித்தின் வலிமை !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஹிந்தி தயாரிப்பாளார் போனி கபூர் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியா ஜூமா குரேசியும் இவர் ஒரு பாலிவுட் நடிகை வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கின்றனர்.

வலிமை அப்டேட் கேட்டு சலித்து போன ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியாக வெளியானது எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் வெளியானதுதான் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

யுவனின் மாஸ்ஸான பின்னணி இசையில் அஜித்தின் ஸ்டைலில் தெறிக்க விடும் மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாளில் யூடிபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளாஇ பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அஜித்தின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.