Connect with us
 

News

மீண்டும் மோதலில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் !

Published

on

தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த படம் பற்றிய விவரங்களை வெளியிடும்படி ரசிகர்கள் அரசியல் நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடங்களிலும் வற்புறுத்தி பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது.

அடுத்த அப்டேட்டாக ரிலீஸ் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாதவன் மூலம் ரசிகளை அதிக அளவு தியேட்டர்களுக்கு இழுக்கவும் ஓ.டி.டி தளங்கள் எழுச்சியை கட்டுபடுத்தவும் முடியும் என்ற்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள்.

அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்துகின்றனர். கடந்த வருடம் பொங்கள் பண்டிகையில் ரஜினிகாந்த்தின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் சாதனை புரிந்தது.

அதே போல வருகிற இந்தா தீபாவளிக்கும் இரு படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.