Connect with us
 

News

டுவிட்டரில் சாதனை படைத்த ஒரே தமிழ் நடிகர் தனுஷ் !

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மிக விரைவில் டோலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படி எல்லா மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் அவர்களை பின் தொடரும் ரசிகர்களும் அதிகாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது தனுஷ் டுவிட்டரில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

அது என்னவென்றால் தனுஷை டுவிட்டர் பக்கத்தில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது. டுவிட்டரில் ஒரு கோடி பாலோவர்களை எட்டும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் தனுஷ்.

தனுஷின் இந்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.