Connect with us
 

News

சந்திரமுகி 2 ரஜினி நடிப்பது குறித்து பி.வாசு விளக்கம் !

Published

on

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு நடிப்பில் 2005-ல் வெளியான திரைப்படம் சந்திரமுகி. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ளது.இதில் ராகவா லாரன்ஸ் கதா நாயகனாக நடிப்பார் என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.இப்படத்திலும் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து இயக்குநர் பி.வாசுவிடம் விசாரித்தபோது தற்போது சந்திரமுகியின் இரண்டாம் பாகத்துக்கான கதை, திரைக்கதை மற்றும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்துக்கான அந்த தொடர்ச்சி சரியான முறையில் இருக்க வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்து வருகிறோம். அடுத்த மாத இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செல்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதே நேரம் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த யாரும் இரண்டாம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மையில்லை. சந்திரமுகி 2 படத்தின் கதை வேறு மாதிரியிருக்கும். சந்திரமுகி படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் இன்னோரு சம்பவம் இருக்கும்.

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு சந்திரமுகி படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று கூறினார் இயக்குநர் பி.வாசு.