Connect with us
 

News

நெற்றிக்கண் படத்தின் வெளிய்யிட்டு அப்டேட் கொடுத்த படக்குழு !

Published

on

அவள் திரைப்படதின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்து நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார் வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார்.

கடந்த 2011-ம் வெளிவந்த பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றபை பெற்றது. இப்படத்தில் நயன்தாரா முதன் முறையாக கண் பார்வையற்றவராக நடித்துள்ளார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தயாராகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவலை விக்னேஷ் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.