Connect with us
 

News

ஷாருக்கானுக்கு ஜோடி சேரும் நயன்தாரா !

Published

on

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்தின் மூலமே அனைவரின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார்.

தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டின் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கானுக்காக ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி பரவி வந்த நிலையில் தற்போது இந்த தகவலை உறுதிபடியுள்ளனர். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.