Connect with us
 

News

ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் அஜித்தின் வலிமை பட டீஸர்?

Published

on

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 60-வது படமான வலிமை இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது.

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதன்படி டீசர் மற்றும் முதல் சிங்கிளை அடுத்த மாதம் முதல் வாரத்தில் செளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.