Connect with us
 

News

வெப் தொடரில் நடிக்கும் ஆர்யா !

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வெப் தொடர்களுக்கும் கிடைத்துவிட்டது. பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தியில் உருவான செப் தொடர் மோகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பரவி உள்ளது.

சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், காஜல் அகர்வால், தமன்னா, பிரியாமணி, சோனியா அகர்வால், மீனா, ரம்யா கிருஷ்ணன், பூர்னா உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். நடிகர் சரத்குமார் இரை என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.

இந்த நிலையில் ஆர்யாவும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார். ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போது ஆர்யாவை ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் வெப் தொடர் ஒன்றில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

திகில் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகவிருக்கும் இந்த தொடரில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

Continue Reading