Connect with us
 

News

மெல்போர்ன் பட விழாவில் சூர்யா மற்றும் சமந்தா பெயர்கள் பரிந்துரை !

Published

on

மெல்போர்ன் இதிய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தமிழில் சேத்துமான், நஸீர் ஆகிய படங்களும் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள படமும் போட்டியிடுகிறது.

சிறந்த நடிகர் விருக்கு சூரரை போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், நஸீர் படத்தில் நடித்த கவுமாரனேவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநர் பிரிவில் சூரரை போற்று இயக்குநர் சுதா கொங்காரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகை விருது பிரிவில் ஷெர்னி படத்தில் நடித்த வித்யா பாலன், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்த்தில் நடித்த நிமிஷா விஜயன் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஓ.டி.டி-யில் வெளியான வெப் தொடர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. இதில் சிறந்த நடிகை பிரிவுக்கு பேமிலி மேன் வெப் தொடரில் நடித்த சமந்தா பரிந்துரைப்பட்டுள்ளார். கொரோனாவால் ஆஸ்திரேலியா பயண தடைகள் விதிர்ருள்ளதால் விருது வழங்கும் விழா இணையதளம் மூலமாக நடைபெறவுள்ளது.