Connect with us
 

News

தொடர்ச்சியாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் விக்ரமின் 3 படங்கள் !

Published

on

சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் சியான் 60 படத்தில் நடித்து வருகிறார். இதில் சியான் 60 படத்தில் நடித்து முழுவதுமாக முடித்து விட்டார். இப்படத்தில் விக்ரமுடன் இவர் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கிறார். இப்படத்திலும் இருவரும் தந்தை மகன் வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படதில் இவர்களுடன் சிம்ரன் வாணி போஜன் நடித்துள்ளனர். கொடைக்கானலில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது தற்போது கொல்கத்தாவில் முடிவடைந்துள்ளது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

தற்போது விக்ரம் கோப்ரா படத்தில் தனது விடுபட்ட காட்சிகளை நடித்து வருகிறார். இப்படத்தை இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அடித்த சில தினங்களில் முடிவடைந்து விடும் என்கிறது படக்குழு.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் விக்ரம் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியில் செல்வன் படத்தின் இறுக்கட்ட படப்பிடிப்பில் பன்கேற்கிறார். இப்படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் திரையரங்குகள் திறந்தவுடனே அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது.