News
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக டெல்லி பறக்கும் பீஸ்ட் படக்குழு !
![](https://cinetimee.com/wp-content/uploads/2021/08/Vijay.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்களாம் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் தான் நடிக்கும் படங்களுக்கு ஞாயிற்று கிழமைகளில் நடிக்கமாட்டாராம் ஆனால் இந்த படத்திற்காக மாதம் ஒன்றுக்கு 25 நாள் தேதிகள் கொடுத்துள்ளாராம். இந்த வேகத்தில் போனால் எதிர்பார்த்த நாளை விட முன்னதாகாவே படம் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக டெல்லியில் படமாக்கப்பட உள்ளதாம் இதற்காக விஜய் மற்றும் படக்குழு டெல்லி செல்ல உள்ளார்களாம்.