Connect with us
 

News

கமல்ஹாசன் திரைக்கதையில் உருவாகும் தேவர் மகன் இரண்டாம் பாகம் !

Published

on

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், கமல்ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தேவர் மகன் இத்திரைப்படம் 1992-ம் ஆண்டு வெளியானது. நாசர் மற்றும் ரேவதி இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் பரதன் இயக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பதாகவும் அதற்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- மலையாள இயக்குநர் மற்றும் எடிட்டருமான மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். அவருக்காக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன் என்றும் கூறினார். அந்த திரைக்கதைத்தான் தேவர் மகன் 2-ம் பாகம் என்றும் இப்படத்தை மகேஷ் நாரணயனன் இயக்கவுள்ளதாகவும் கூறினார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதன் பின்னர் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்து விட்டு தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம்.