Connect with us
 

News

அருண் விஜய் புதிய படத்தில் பிரகாஷ் கதாப்பாத்திரத்தில் சமுத்திரக்கனி !

Published

on

இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அதற்கான முன்பணமும் கொடுக்கப்பட்டுருந்தது.

சமீபத்தில் தனது வீட்டில் கீழே தவறி விழுந்ததில் தோள்பட்டையில் பலத்த அடிபட்டு ஐதராபாத் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அருண் விஜய் படப்பிடிப்பில் அவரால் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஹரியை தொடர்வு கொண்ட பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் வாங்கிய முன்பணத்தை திருப்பு கொடுத்து விடுகிறேன் என்றும் எனக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வையுங்கள் என்று கூறி இந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.

இதனையடுத்து பிரகாஷ்ராஜூக்கு பதிலாக தற்போது சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். அருண் விஜய், சமுத்திரக்கனி நடித்த காட்சிகள் தற்போது பழனி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா, யோகி பாபு, தலைவாசல் விஜய், ஜெயபாலன், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.