Connect with us
 

News

மீண்டும் ஆரம்பமாகும் சிம்புவின் பத்து தல படப்பிடிப்பு !

Published

on

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஶ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் நரதன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான படம் முப்தி இந்த திரைப்படம் கன்னடத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா பத்து தல என்ற பெயரில் தற்போது இயக்கி வருகிறார்.

இதில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது. முன்னதாக பத்து தல படத்தின் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மாநாடு படத்தை முடித்த கையோடு சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.