Connect with us
 

News

தளபதி 62 படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

Published

on

மெர்சல் படத்தின் பிரமாண்டமான வசூல் வெற்றிக்கு பின்னர் தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்று அனைவரும் தெரிந்த செய்தியே.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது உறுதியாகிவிட்டது. ஆனால் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

நிலையில் தளபதி 62 படத்தின் இசையமைப்பாளாரக ஏ.ஆர்.ரகுமான் என்று அதிகார்வபூர்வ செய்தி வெளியாகிவிட்டது.

இந்த கூட்டணி இதற்கு முன்பாக அழகிய தமிழ் மகன்,மெர்சல் படங்களின் இணைந்து உள்ளது குறிப்பாக மெர்சல் படத்தின் இசை உலகமெங்கும் அனைவராலும் வெகுவாக பேசப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கவிருக்கிறார்.சோலோ’ புகழ் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

Continue Reading