Connect with us
 

News

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் !

Published

on

தளபதி மாஸ்டர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் தளபதியின் 65-வது படமாகும் இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பீஸ்ட் படத்தை பொங்கள் பண்டிகை திருநாளில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் படக்குழு. கொரோனா பரவலால் படப்பிடிப்பு நடத்துவதில் சற்று தாமதமானது இதன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியையும் தள்ளி வைத்தது படக்குழு.

இந்த படத்தை முடித்ததும் விஜய்யின் 66-வது படத்தை இயக்குநர் வம்சி பைடி பள்ளி இயக்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது இப்படம். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளில் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர்களின் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் சரி வசூலிலும் சரி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் வம்சி பைடி பள்ளி படத்தை முடித்து விட்டு இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரின் 7ஜி நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.