Connect with us
 

News

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின் !

Published

on

அஜித்தின் ஆஞ்சனேயா, விஷாலின் சண்டைக்கோழி, ஆயுத எழுத்து தளபை விஜய்யின் புதிய கீதை, மாதவனின் ரன் போன்ற படங்களில் கதா நாயகியாக நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு இவருக்கும் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் மின்னர் முழுமையாக நடிப்பிலிருந்து ஒதுங்கி விட்டார் மீரா ஜாஸ்மின். நடிக்காமல் இருந்த இந்த காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார் மீரா ஜாஸ்மின்.

தற்போது தனது உடல் எடையை கனிசமாக குறைத்து மிகவும் அழகான தோற்றத்துக்கு மாறியுள்ளார். தற்போது சமூக வலத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தை சத்யன் அந்திக்காடு இயக்குகிறார். இப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின்.