Connect with us
 

News

தெலுங்கு வெப் தொடரில் நடிக்கும் திரிஷா !

Published

on

பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். கர்ஜனை மற்றும் சதுரங்கவேட்டை மற்றும் ராங்கி போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு தற்போது மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பிரம்மாணடமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் மொத்தமாக இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிய படத்தில் நடிக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த திரிஷா வெப் தொடரின் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை சூர்யா வங்கலா என்றவர் இயக்கவுள்ளார்.

தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிருந்த என இந்த வெப் தொடருக்கு பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓடிடி தளமான சோனி லைவ் தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.