Connect with us
 

News

வசூலை குவித்து வெற்றி பட வரிசையில் அரண்மனை 3 !

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் அரண்மனை 3 இதில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் படத்தின் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். சி.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனம் ரசிகர்களிடையே வந்தது.

பண்டிகை விடுமுறையை குறிவைத்து வெளியான இந்த திரைப்படம் 4 நாட்களில் சுமார் 15 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 சத வீத இருக்கைகளுடன் வெளியாகியும் இந்த வசூல் மிகப்பெரிய வசூல் என்கிறது சினிமா வட்டாரம்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படமும் சினிமா விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபகரமான படமாக அமையும் என்கிறது சினிமா வட்டாரம்.