Connect with us
 

Reviews

Annaatthe Review

Published

on

சி றுத்தை சிவாவின் விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினி தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு இருவரும் இணைந்து அண்ணாத்த என்ற படத்தின் இணைந்தனர். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. கிராமத்துக் கதைகளில் கலக்கி வருச சிவா, நீண்ட நாட்களாகக் கிராமத்துக் கதைகளில் நடிக்காத ரஜினியை வைத்து எவ்வாறு எடுக்க போகிறார் என்ற நிலையில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் இருந்தனர். அந்த ஆவலை பூர்த்தி செய்ததா இல்லையா?

Movie Details

தன் ஊர் உறவு என வாழும் அண்ணாத்த ரஜினிகாந்த். தங்கையான கீர்த்தி சுரேஷ் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். அண்ணன் சந்தோஷமாக வாழ தான் காதல் செய்யும் விவகாரத்தை ரஜினி பார்க்கும் பையனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் காதலனின் சூழ்நிலையால் திருமணதுக்கு ஒரு நாள் முன்னர் காதலனுடன் ஓடுகிறார் கீர்த்தி சுரேஷ். தன் தன் தங்கை எல்லாம் தெரிந்தும் ஓடி போகிறார் என்று அறிந்து அவர்களை போக விடுகிறார் ரஜினிகாந்த்.

அங்கிருந்து ஓடி போன கீர்த்தி சுரேஷ் கொல்கத்தா போகிறார். அங்கு சென்ற கீர்த்தி சுரேஷ் மிகவும் ஏழ்மையான நிலையிலும் பெரும் சிக்கலில் இருக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அறிகிறார் அண்ணாத்த ரஜினிகாந்த் அதன் பின்னர் கொல்கத்தா செல்லும் ரஜினிகாந்த் தங்கைக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்று அறிந்து அவரை காப்பாற்றுவதே படத்தின் மீதிக்கதை.

காளையன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் தனக்கே உரிய அந்த மாஸ், காமெடி, அதிரடி, சென்டிமென்ட் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். எழுபதி வயதிலும் ரஜினி அவர்களுக்கு இப்படி ஒரு எனர்ஜியா என்று வியக்க வைக்கும் அளவிற்கு நடித்துள்ளார்.ஊர் மக்களுக்கு ஒன்று என்றால் சண்டையிடுவது, தங்கை மீது அளவு கடந்த பாசம், நயன்தாராவுடன் ரொமான்ஸ், எதிரிகளை பந்து போல் பறக்கவிடுவது மாஸ் காட்டுகிறார் ரஜினிகாந்த்.

தங்கையாக நடித்துள்ளா கீர்த்தி சுரேஷ் அழகான தங்கையாக வந்து பின்னர் அழுகை தங்கையாக மாறியுள்ளார். தனக்கு கொடுத்த வேடத்தை மிக அழகாக நடித்துள்ளார். அண்ணன் மீது பாசம், காமெடி வலி, பிரிவு, பரிதவிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

விஜய் நடித்த திருப்பாச்சி உள்ளிட்ட சில திரைப்படங்களின் சாயல் இப்படத்தின் காட்சிகளாக வந்து போகின்றது ஆனாலும் எல்லாவற்றையும் மீறி ரஜினிகாந்த் காட்டும் மேஜிக் திரை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
Cinetimee

நயன்தாரா படத்தில் வழக்கறிஞராக வருகிரார். அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார். ரஜினிக்கு ஜோடி என்பதால் இந்த கதையை ஒப்புக்கொண்டாரோ என்று நம்மை யோசிக்கவும் வைக்கிறதி. ரஜனியை பார்த்தவுடன் காதல், டூயட் கொஞ்சம் ஓவரா இருக்குதோ.
படத்தின் பல முக்கியமான காட்சிகளில் நயன்தாரா இல்லை என்பதுதான் வருத்தம்.

குஷ்பூ மற்றும் மீனா படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்திருப்பார்கள் என்று நினைத்த நமக்கு பெரும் ஏமாற்றம். ரஜினியின் முறை பெண்களாக வரும் இருவரும் அபத்தமான காமெடி செய்து நம்ம சோதிக்கிறார்கள்.

வில்லன் வேடத்தில் வரும் அபிமன்யு சிங் மற்றும் ஜெயபதி பாபு கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும். ரஜனிக்கும் அவர் ரசிகர்களுக்கு ஏற்ற வாறு கதையை ஒரு கமர்ஷியலாக கொடுத்துள்ளார் சிறுத்தை சிவா. ஆனாலும் திரைக்கதையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அடுத்த காட்சி இதுதான் என்று யூகிக்க கூடியதால் படத்தில் எதுவுமே பெரிதாக எடுபடவில்லை.

படத்தின் இடைவேளைக்கு ஒரு 20 நிமிடத்துக்கு முன்பாக இதுதான் கதை என்று சொல்லி ரசிகர்களை அழைத்து சென்று இரண்டாம் பாதியில் அதை சரிவர செய்யவில்லை. படத்தில் இரண்டாம் பாதியில் வரும் தேவையற்ற பல காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்து விட்டது.

இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் நன்றாக கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமியின் கலர் வண்ணமும் கை வண்ணமும் கண்களுக்கு குளிர்ச்சி.


மொத்தத்தில் அண்ணாத்த ரசிகர்களின் காத்திருப்புக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.