Connect with us
 

News

மாஸ்டர் ப்ளான் போடும் வலிமை படக்குழு !

Published

on

ஜனவரி திரைக்கு வரவிருக்கும் அஜித்குமாரின் வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கூட தற்போது அஜித் குமார் படத்தை பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கூடுதல் சிறப்பு காட்சிகளை திரையிட்டு முதல் நாளிலேயே கூடுதல் வசூல் பார்க்க வலிமை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதாவது பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 4 மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமது வழங்கப்படும். ஆனால் வலிமை படத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி பெறும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி அனுமதி கிடைத்தால் முதல் நாளிலேயே 8 காட்சிகள் வரை திரையிட முடியும் இதன் மூலம் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் சாதனை முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கடுகிறது.

நள்ளிரவு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான். வலிமை படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். நாயகியாக பாலிவுட் நடுகை கியூமா குரோஷி நடிக்கிறார் வில்லனாக கார்த்திகேயா மற்றும் சுமித்ரா நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.