Connect with us
 

News

பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் ஸ்டைலிலும் விஜய் ஸ்டைலிலும் உருவாகியுள்ளது – பூஜா ஹெக்டே !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளாது. விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தளபதி விஜய் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கொண்டாடினர். ஒரே ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தையே திக்கு முக்காட வைத்தது.

படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள வீடியோவில்

பீஸ்ட் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. ஒரு ஒரு காட்சியிலும் ரசித்து நடித்தேன். படப்பிடிப்பில் நிறைய சிரிக்க வைத்தோம். நீங்களும் ஒவ்வோரு காட்சியிலும் ரசித்து சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் ஸ்டைலிலும் விஜய் ஸ்டைலிலும் உருவாகியுள்ளது இந்த படம். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக இருக்கும். இவர்கள் இருவருடனும் பணியாற்றியது பெருமையாகவுள்ளது என்று கூறினார்.