செம்மரக் கடத்தல் அதிகம் நடைபெறும் பகுதியான சித்தூர் பகுதி சேஷாசலம் காடுகளில் நடக்கும் கதை படத்தின் பின்னணி முழுமையாக அமைந்திருக்கிறது. அங்குதான் செம்மரக்கடத்தலில் சாதாரண கூலியாக வேலை செய்கிறார் அல்லு அர்ஜூன் எனும் புஷ்பா. படிப்படியாக கடீன வேலையால் உயர்ந்து கமிஷனுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறார் புஷ்பா. அப்படி ஒரு சிண்டிகேட்டை தாண்டி சென்னை ஏஜென்ட்டுக்கே மரத்தை அனுக்கிறார் அல்லு அர்ஜூன்.
அதன் பின்னர் அந்த சிண்டிகேட்டின் தலைவர் பதவிக்கே வந்துவிடுகிறார். இப்படி யாருமெ அசைக்க முடியாத முரட்டு ராஜாவாக இருந்து வரும் புஷ்பாவுக்கு கண்ணில் விரவிட்டு ஆட்டம் காட்ட அந்த காட்டுக்கு புதிய அதிகாரியாக வருகிறார் பன்வர் சிங் ஷெகாவது (பகத் பாசில்) இவர்களின் முதல் சந்திப்பே அடிதடியில் போய் முடிகிறது. அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் படத்தின் மீதிக்கதை.
புஷ்பா கதாப்பாத்திரத்திற்காக தன் உடலில் பல மாற்றங்களை உண்மையாகவே மாற்றியிருக்கிறார் அல்லு அர்ஜூன் குறிப்பாக தாடி, தலை முடி, செம்பட்டை நிறம் என இதுவரையில் இது போன்ற ஒரு கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் ஏற்று நடித்ததே இல்லை.
குறிப்பாக இவரின் நடை, உடை, பாவனை, உடல்மொழி, அசைவு என அனைத்திலும் ஏற்றுக்கொண்ட அந்த புஷ்பா எனும் புஷ்பராஜ் நன்றாக தெரிகிறார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் வித்தியாசமான அல்லு அர்ஜூனை பார்க்க முடிகிறது. அதுவும் இவர் பேசும் அந்த ஒரு மாஸ் வசனம்
புஷ்பான்னா ப்ளவர் இல்ல பயர் என்கிற வசனம் சும்ம முதல் பாதியை அதிர வைக்கிறது.
Cinetimee
கிராமத்து பெண்ணாக வரும் ராஷ்மிகா மந்தானா பாவாடை தாவணியில் கறுப்பு நிறத்துடன் கிளாமருடன் வந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். ராஷ்மிகாவின் வழக்கமான அந்த துறு துறு சுட்டித்தனம் இந்த படத்தில் காணவில்லை அதை கண்டிப்பாக ரசிகர்கள் மிஸ் பண்ணுவிங்க. சாமி சாமி பாடலில் பாவனை மூலம் சும்மா மிரட்டியுள்ளார்.
கொண்டா ரெட்டியாக வரும் அஜய் கோஷ், சிண்டிகேட் தலைவர் மங்களம் சீனுவாக வரும் நகைச்சுவை நடிகர் சுனில் வில்லனாகவும் சிறப்பமாக நடித்துள்ளார்.
காடு அதற்குள் நடக்கும் கடத்தல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனால் அதற்கு சரியான திரைக்கதையும் அழுத்தமான கதையும் இல்லாததால் படத்தின் விறுவிறுப்பு எதுவுமே இல்லாததும் மிகப்பெரிய குறையாக அமைந்து விட்டது. ஒரு வேலை இரண்டு பாகமாக இப்படத்தை முதலில் திட்டமிட்ட காரணத்தால் என்னமோ அதற்கு ஏற்றவாறு திரைக்கதையை எழுதிருக்கிறார் போல.
மிகப்பெரிய மலையாக காட்டும் புஷ்பா சின்ன சின்ன எறுப்பு கூட மோதுவது பார்பதற்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போதுதான் பகத் பாசில் வருகிறார் படம் முழுவதுமே வந்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.
DSP இசையில் சாமி சாமி மற்றும் ஓ சொல்றியா பாடம் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். மிரோஸ்லா ரூபா ப்ரோக்செக் காட்டின் அழகை தனது கடின உழைப்பால் மிக மிக அழகாக காட்டியுள்ளார்.
கண்டிப்பாக மிக அதிகமாக எதிர்பார்த்து புஷ்பா படத்தின் முதல் பாகத்தை பார்க்க வரும் அனைவருக்கும் கண்டிப்பாக மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும்.