Connect with us
 

News

போனி கபூரை மும்பைக்கு சென்று திடீரென சந்தித்த அஜித் குமார் !

Published

on

அஜித்குமார் நடிப்பில் பொங்களை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வரவிருந்த திரைப்படம் வலிமை. கொரோனா பரவல் அதிகமானதால் இந்த படத்தின் வெளியீடு தள்ளி போனது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இன்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்துடன் நிற்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இன்று மும்பையிலுள்ள என் அலுவலகத்தில் அஜித் அவர்கள் வந்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வலிமை படத்தை தொடர்ந்த் போனி கபூர் அஜித் மீண்டும் அடுத்த படத்தில் இணைய உள்ளனர். வினோத் இப்படத்தை இயக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வலிமை படத்தில் பின்னணி இசை இயக்குநர் வினோத்துக்கு பிடிக்கவில்லையாம் அதனால் இசையமைப்பாளார் ஜிப்ரான் வலிமை படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.